கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பள்ளி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் மற்றும் அவரது தாத்தா பல இடங்களில் மாணவியை தேடி வந்துள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இச்சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினரிடம் பேத்தியை கண்டுபிடித்து தரும்படி மாணவியின் தாத்தா புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து மாணவியை விரைந்து தேடி வருகின்றனர்.