Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு : மாணவிகளை சோதனை செய்வதற்கு தடை..!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்வதற்கு தடைவிதித்து அரசுதேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11 மற்றும்  12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற  மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசுத்தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவிகளை ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது என்றும், பெண் ஆசிரியர்களைக் கொண்டு தான் சோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி புகார்களுக்கு  இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படையினர்  கூர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |