ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது இந்த ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்துவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நடைமேடை கட்டண உயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்தது. இந்த திடீர் கட்டணம் உயர்வால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக காட்பாடி ரயில் நிலையத்திற்கு தங்களது உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள் கட்டண உயர்வை அறிந்ததும் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.