அவல் உப்புமா செய்வது பற்றிய தொகுப்பு
தேவையான பொருட்கள்
அவள் – அரை கிலோ
பச்சை மிளகாய் – ஆறு
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
கடுகு – சிறிதளவு
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 4
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- அவலை நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
- பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் கடலைப் பருப்பை போட்டு தாளிக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறி வருகையில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் மஞ்சள் பொடியை தேவைக்கேற்ப சேர்த்து விட்டு தண்ணீரில் ஊறிய அவளை அதனுடன் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி விட்டு வெந்தவுடன் இறக்கி விடவும். அவல் உப்புமா ரெடி.
அவளின் நன்மைகள்
மிகவும் எளிதாக செரிமானமாகும்
உடல் பருமனை குறைக்க உதவும்
உடலில் உள்ள சூட்டை தணித்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை அகற்றும்