பிஎஸ்என்எல் 5g சேவை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த ஆறு மாதங்களில் 200 நகரங்களில் 5G சேவை அமல்படுத்தப்படும்.இரண்டு ஆண்டுகளில் நாட்டின் எண்பது சதவீதம் முதல் 90 சதவீதம் பகுதிகளுக்கு 5G சேவையை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1 முதல் 5g அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories