கடந்த 2019 – 2021 ஆண்டு டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் நினைவு சின்னங்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ரூ.22.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிய வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏலம் விடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.1,200-க்கு மேற்பட்ட இப்பொருட்களின் ஏலம், பிரதமரின் பிறந்தநாளான கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது.
சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலை உள்ளிட்ட பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல்வேறு பரிசு பொருட்களின் மின்னணு ஏலம் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏலம் விடுதல் நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில் ஏழாம் விடும் பணி அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.இந்த ஏலத்தின் மூலம் பெறப்படும் இது கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.