Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்” வளர்த்த நாயை கொன்றதாக புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்.‌…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் நடு குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் பட்டா நிலத்தை சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காக தானமாக வழங்கி விட்டார். இவர் தானமாக கொடுத்த நிலம் போக மீதமுள்ள நிலத்திற்கு சென்று வர அப்பகுதியில் வசிக்கும் சிலர் தங்களுடைய பாதை நிலத்தை ஜீவாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் மட்டும் ஜீவாவுக்கு நிலத்தை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜீவா தாங்கள் வளர்த்து வந்த 5 நாய்களை நடுக்குப்பம் அருகே யாரோ கொன்று புதைத்து விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த கூவத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டதாக கூறிய இடத்தில் இருந்து நாய்களின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜீவா புகார் கொடுத்த 5 பேரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊரை விட்டு ஒதுக்கியதாக கூறப்பட்ட ஆரணி, சேகர், வேலாயுதம், இளமதி உட்பட 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

Categories

Tech |