இதுவரை சாப்பிடாத சுவைமிக்க கேரட் எலுமிச்சை சாதம்.
தேவையான பொருட்கள்
சாதம் – இரண்டு கிண்ணம்
பச்சைமிளகாய் – 4
கேரட் – 2
எலுமிச்சை பழம் – 2
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு – சிறிதளவு
செய்முறை
- முதலில் கேரட்டை தோலை நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.
- எலுமிச்சை சாரை நன்றாக பிழிந்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து வைக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு போட்டு வெடித்தவுடன் நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
- பின்னர் தோல் நீக்கி துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 நிமிடங்கள் காத்திருக்கவும்.
- அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- மஞ்சள் வாசம் போனவுடன் அதனை எடுத்து சாதத்தில் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
- சுமார் அரை மணி நேரம் சாதத்தை அந்த கலவையில் ஊற வைக்கவும்.
- இப்பொது சுவைமிக்க கேரட் எலுமிச்சை சாதம் ரெடி