மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா , காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் முற்றியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த CAA , NPR , NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்ற நிலையில் , பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டமசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட்டுள்ளது.
சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் கூட்டணிஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்த நிலையில் தீடீர் திருப்பமாக இந்த சட்டங்களை ஆதரித்துள்ளார். நேற்று அவர் டெல்லி சென்று பிரதமர் மோடி சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பை பிறப்பித்துள்ளார். இதனால் ஆளும் கூட்டணி அரசுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.