Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே….. இன்று முதல் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்தில் பொதுவாக பண்டிகை நாட்கள் அதிகமாக வரும் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களும் அதிகமாகவே இருக்கும்.எனவே சில நகரங்களில் நாளை முதல் வாரம் முழுவதும் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆனால் வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.இதனால் மக்கள் வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்பாக தங்கள் நகரத்தில் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொள்ள வேண்டும்.

அக்டோபர் 3 – துர்கா பூஜை (அகர்தலா, கவுகாத்தி, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடப்படும்)

அக்டோபர் 4 – துர்கா பூஜை/தசரா (இந்தப் பின்வரும் நகரங்கள் வங்கி மூடப்படும்: அகர்தலா, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)

அக்டோபர் 5 – துர்கா பூஜை (இம்பாலைத் தவிர இந்தியா முழுவதும் வங்கி மூடப்படும்)

அக்டோபர் 6 – துர்கா பூஜை (காங்டாக்கில் வங்கிகள் மூடப்படும்)

அக்டோபர் 7 – காங்டாக்கில் வங்கி விடுமுறை

அக்டோபர் 8 – இரண்டாவது சனிக்கிழமை மற்றும் மிலாத்-இ-ஷெரிப்/ஈத்-இ-மிலாத்-உல்-நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள்) போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 9 – ஞாயிறு

Categories

Tech |