Categories
அரசியல்

வீட்ல கொலு வைத்து வழிபடுறீங்களா…? அப்போ இதை கட்டாயம் செய்யுங்க…. அம்பிகை அருள் கிடைக்கும்….!!!!

நவராத்திரிக்கு பலரும் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். ஒருசிலர் கொலு வைப்பதை தங்களுடைய பாரம்பரியமாகவே வைத்து வருவார்கள். இப்படி பாரம்பரியமாக வைத்து வருபவர்களுக்கு கொலு எப்படி வைக்க வேண்டும் எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் புதிதாக வைப்பவர்களுக்கு எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரியாது. அதனை தெரிந்து வைப்பது அவசியம்.

அப்படி வைப்பதனால் முழுமையான பலன்கள் கிடைக்கும். நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள் திறமைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து நம்முடைய கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக அனைத்து வீடுகளிலுமே கொலு வைக்கப்படுவது வழக்கம். கொலு வைக்கும் பொழுது படிகளில் மரப்பாச்சி பொம்மை நிச்சயம் வைக்க வேண்டும்.

நவராத்திரி சமயத்தில் பூஜைக்கு வாங்கிய வெற்றிலை வாடாமல் இருப்பதற்கு வெற்றிலை மேல் பித்தளை டம்ளரை கவிழ்த்து. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தைகளை உட்கார வைத்து கொலுவில் உள்ள சுவாமி சிலைகளை காட்டி புராண கதை சொல்ல வைக்கலாம். ஒவ்வொரு நவராத்திரிக்கும் புதுப்புது பொம்மைகள் வாங்குவது சம்பிரதாயம். கொலு வைக்கும் கோவில்களுக்கும் புது பொம்மை வாங்கி கொடுக்கலாம். வீட்டிற்கு வருவோர்களுக்கு வெற்றிலை பாக்கு சுண்டல் போன்றவற்றை சணல் பைகள் காகித பைகளில் வைத்து கொடுக்கலாம். கொலுவிற்கு வந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுது நம்மால் முடிந்த அளவில் சிறிய பொம்மைகளை வாங்கி அவர்களுக்கு பரிசாக கொடுத்தால் நமக்கு அம்பிகையின் அருள் கிடைக்கும்.

Categories

Tech |