Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் அலப்பறைகள் என ஒரு புத்தகம்”…. தி.மு.க-வை சாடும் அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

தேச தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். அந்த அடிப்படையில் அ.தி.மு.க சார்பாக மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

இவற்றில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “அ.தி.மு.க-வின்  சார்பாக காமராஜருக்கு புகழ்மாலை சூடப்பட்டது. கிங்மேக்கராக காமராஜ் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்திய அரசியலில் பல்வேறு தலைவர்களை உருவாக்கியவர். விடியாத தி.மு.க அரசு ஏற்கனவே குழப்பத்தின் உச்சியில் இருக்கிறது.

அவர்களுக்கு ஆட்சி செய்யவும் தெரியவில்லை, அமைச்சர்களுக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. தி.மு.க-வில் அமைச்சர்களின் அலப்பறைகள் என்ற ஒரு புத்தகமே எழுதலாம். ஏனெனில் ஆட்சியாளர்களுடன் அதிகாரிகளும் குழம்பி விட்டனர். பொதுச் செயலாளர் தேர்தலை திசை திருப்பி விட்டனர்” என்று கூறினார்.

Categories

Tech |