Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… கீழே விழுந்து நொறுங்கிய விமானம்…. கோர விபத்தில் 3 வீரர்கள் பலி…!!!

மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர், தபாஸ்கோ என்னும் மாகாணத்தில் கௌதமாலா நாட்டின் எல்லையின் அருகில் வழக்கம் போல் சோதனை பணியை மேற்கொண்டு இருந்தது. அதில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் இருந்தார்கள். ஹெலிகாப்டர்  சென்ட்லா நகருக்கு அருகில் சென்று சமயத்தில் திடீரென்று விமானிகள் கட்டுப்பாட்டை இழந்தது.

அதனைத்தொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் மூன்று கடற்கரை வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

மீதம் இருந்த இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். திடீரென்று ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்க காரணம் என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனவே, இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள மெக்ஸிகோ நாட்டின் கடற்படை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |