Categories
மாநில செய்திகள்

இலவசமே வேண்டாம்…. காசு கொடுக்கிறோம்… எங்களுக்கு மரியாதை முக்கியம்… ஆவேசமாக பேசிய பெண்….!!!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றிய மங்களம் ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பலரும் தங்கள் பிரச்சினைகளை குறித்து பேசினார். அப்போது மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்து தமிழரசி என்பவர் பெண்களுக்கு இலவச பஸ் வேண்டாம். பெண் பயணிகள் இலவசம் என்பதால் நடத்துனரும் ஓட்டுநரும் பெண்களை மதிப்பதில்லை.

அதாவது, பேருந்தை நிறுத்தும் இடத்தில் இருந்து தள்ளி நிறுத்துவது, ஏறும்போதே பேருந்தை எடுப்பது, ஏளனமாக பேசுவது என பல வகைகளில் தொடர்ந்து பெண்கள் அதிகமாக அவமானப்படுத்துகிறார்கள். இதனையடுத்து இந்த பிரச்சனைகளுக்கு நாங்கள் டிக்கெட் கூட எடுத்து விடுகிறோம். எங்களுக்கும் மரியாதை கிடைக்கும், அரசுக்கும் வருமானம் கிடைக்கும் இலவச பயணம் தேவை இல்லை. மேலும் கூடுதலாக பேருந்துகள் விடுங்கள் என மங்களம் நத்தமேடு பகுதியை சேர்ந்த தமிழரசி என்ற பெண் கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |