Categories
ஆன்மிகம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிறவி பெருமாள் ஐயன் கோவில்…. கோலாகலமாக நடைபெற்ற கொடை விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்ப்பு….!!!!

திசையன்விளை அருகில் முதுமொத்தன்மொழி கிரமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆனைகுடி பிறவி பெருமாள் ஐயன் கோவில் கொடைவிழா 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, வில்லு பாட்டு, புஸ்ப அலங்கார பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது.

மேலும் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், பக்தி இசை கச்சேரி, சங்கிலி பூதத்தார் படைப்பு பூஜை, அன்னதானம், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபாடு செய்தனர்.

Categories

Tech |