ஃப்ளோரிடாவை தாக்கிய புயலால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வரலாற்றின் மிகவும் மோசமான புயல்களில் ஒன்றாக இயான் புயல் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா என்னும் கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை அன்று மதியம் கரையை கடந்துள்ளது. தீவிர வலுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவை தாக்கிய இந்த புயலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50க்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை புயலில் சிக்கி குறைந்தது 54 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த மீட்பு பணிக்காக ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ப்ளோரிட மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புயலின் விளைவாக ப்ளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் உயிர்பிழித்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இதுவரை புயலில் சிக்கி ப்ளோரிடாவில் குறைந்தது 76 பேரும் வட கரோலினாவில் நான்கு பேரும் பலியாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு பேரழிவு ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வருகின்ற புதன்கிழமை ப்ளோரிடா செல்ல இருக்கின்றார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.