Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோலிய மண்டலம் – அரசானை ரத்து ….!!

கடலூர் நாகை மாவட்டங்களில் அமைய இருந்த பெட்ரோலிய மண்டல அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து இருக்கின்றது.

காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ , கார்பன் உள்ளிட்டதிட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து , விவசாயத்தை மேன்படுத்த வேண்டுமென்று டெல்டா பகுதி விவசாயிகள் நீண்ட ஆண்டு காலமாக கோரிக்கை முன்வைத்து வந்தனர். இதனை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சட்டமாக இயற்றி தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய வைத்த நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் கடலூர் , நாகை மாவட்டங்களில் உள்ள 45 திட்டத்தை ரத்து செய்து கிராமங்களில் 57,000 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலியம் , பெட்ரோலிய ரசாயன பொருட்கள் முதலீட்டு மண்டலமாக அறிவித்து அரசானை வெளியிட்டது.

இதனால் ஒத்துமொத்த விவசாயமும் பாதிப்படையும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்திருக்கிறது. டெல்டா பகுதியை காவேரி வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |