மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவருக்கும் ஸ்ரீ லட்சுமி என்பவருக்கும் 1984 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இதனயடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது இவரின் மனைவி பிரித்திவிராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், அவர் எனக்கு மாதம் 10 லட்சம் ஜீவனாசம் வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கூறினார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரித்துவிராஜன் சொத்துக்கள் மற்றும் வருவாய் சம்பந்தப்பட்ட விவரங்களை ஆராய்ந்து இவரின் மனைவிக்கு மாதம் 8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.