Categories
சினிமா

தமிழ் சீரியலில்…. மீண்டும் களமிறங்கப் போகும் ப்ரீத்தி ஷர்மா…. லீக்கான தகவல்….!!!!

கலர்ஸ் தமிழின் “திருமணம்” தொடர் வாயிலாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இதையடுத்து இவர் தொடர்ந்து சித்தி சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்துவந்தார். மேலும் மாடலிங்கில் கலக்கிவந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பல பேர் தீவிரமான ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதனிடையில் சித்தி 2 சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது. அதன்பின் ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டைகட்டி சென்று விட்டார்.

இதன் காரணமாக தமிழகத்தில் அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர். இந்த நிலையில் அவர் இப்போது மீண்டுமாக  தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதியதாக உருவாகவுள்ள சீரியலில் அக்னி, தினேஷ், நிவிஷா மற்றும் ராதிகா ப்ரீத்தி போன்றோர் மெயின் ரோல்களில் நடிக்க இருந்தனர். இப்போது அந்த தொடரில் இருந்து ராதிகா ப்ரீத்தி விலகி விட்டதால் அவருக்கு பதில் ப்ரீத்தி ஷர்மா என்ட்ரி கொடுக்கவுள்ளார். ப்ரீத்தி ஷர்மா இத்தொடரில் அக்னிக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ப்ரீத்திஷர்மா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே விரைவில் சீரியல் குறித்த அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

Categories

Tech |