ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார் அத்துடன் சார்லஸ் பதவி வகித்த வேல்ஸ் இளவரசர் பட்டத்தை அவரது மூத்த மகனான வில்லியம் மரபு வழியாக வழங்க பெற்றுள்ளார். இதன் மூலமாக ராணியாரின் மரணத்திற்கு பின் புதிய வேல்ஸ் இளவரசராக வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டன் வேல்ஸ் இளவரசியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த சூழலில் வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது ராணி கன்சார்ட் கமீலா அடிக்கடி அமைதியாக வசிக்கும் லாண்டோ வேரிக்கு அருகில் உள்ள மைட்பாய்ன் புறநகர் பகுதியில் உள்ள ல்வினிவெர்மோட் தோட்டம் தற்போது புதிய வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகிய இருவருக்கும் மரபுரிமையாக பெற்று இருக்கின்றார். இந்த நிலையில் camarthenshire மூளையில் அமைந்துள்ள பரந்து விரிந்த இந்த பழங்கால சொத்துக்கள் 15 வருடங்களுக்கு முன்பாக சார்லஸ் மன்னரால் வாங்கப்பட்டது. ஆனால் அங்கு மன்னர் சார்லஸ் ஒவ்வொரு வருடமும் செயின் டேவிட் தினத்தில் இந்த பழங்கால சொத்திற்கு வருகை தந்து அவரது அழகான நேரத்தை செலவழித்து வந்துள்ளார் என வேல்ஸ் ஆன்லைன் கூறியுள்ளது.