Categories
டெக்னாலஜி

ஜியோ 5ஜி வெளியீடு….. எந்த பகுதிகளில் கிடைக்கும்….?? வெளியான சில தகவல்கள்…!!

முன்னணி நிறுவனமான Reliance JIO இந்திய டெலிகாம் சந்தையில் விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு நகரங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி JIO 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 4 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டதும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் JIO 5ஜி சேவைகள் வெளியிடப்பட உள்ளன.

Reliance JIO நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிடும் போது, 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக வழங்கியது. மேலும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதே போன்ற திட்டத்தை Reliance JIO 5ஜி வெளியீட்டிலும்  மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது பற்றி Reliance JIO சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Categories

Tech |