ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று அணு ஆயுதம் வெடிக்கும் காட்சிகளையும் அணு ஆயுதம் வெடிப்பதால் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள் மற்றும் நச்சு வாழ்வில் இருந்து காப்பாற்றும் முகமூடிகள் முதலான காட்சிகளை வெளியிட்டுள்ளது. மேலும் அணு ஆயுதங்களை பயன்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்ற காட்சியை கண் முன் கொண்டு வந்து பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கத்தில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ரஷ்யாவின் மையப் பகுதியில் இருந்து புறப்பட்டு செல்லும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த காட்சிகளில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ஏற்றபட்ட ரயில்களை காண முடிகிறது. மேலும் அவை மத்திய ரஷ்யாவில் இருந்து உக்ரைனில் போர் நடக்கும் பகுதியை நோக்கி பயணம் செய்வதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை நிபுணரான konrad muzyka என்பவர் இது ரஷ்யா மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கை விடுத்துள்ள சமிக்ஞையாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதற்கிடையே ரஷ்யாவின் செசன்ய பகுதி தலைவர் ஆன Ramzan kadyrov உக்ரைன் மீது அணு ஆயுதங்கள் உபயோகிப்பது குறித்து ரஷ்யா பரிசீலனை செய்ய வேண்டும் என்பது கூறி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.