Categories
சினிமா

“முன்னாள் காதலர்கள் என் நல்ல நண்பர்கள்”….. ஓபனாக பேசிய ராஷ்மிகா மந்தனா….!!!!

தமிழில் சுல்தான் திரைப்படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்-க்கு ஜோடியாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ராஷ்மிகா தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ராஷ்மிகாவுக்கு முன்னதாக திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்றுபோனது. இந்நிலையில் இப்போது தன் முன்னாள் காதலர்கள் பற்றி ராஷ்மிகா வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக ராஷ்மிகா பேட்டியளித்தபோது “என் வாழ்க்கை வெளிப்படையானது ஆகும்.

எனது முன்னாள் காதலர்களை தற்போதும் நான் நல்ல நண்பர்களாகவே பார்க்கிறேன். அவர்களின் தற்போதைய மனைவிமார்களை சந்திக்க எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு முன்னாள் காதலர்களுடன் சுமுகநட்பில் இருப்பது நல்ல லட்சணமாக இல்லாமல் இருக்கலாம். எனினும் நான் யாருக்கும் விரோதியாக இருக்கமாட்டேன். என்னையும் நடிகர் விஜய் தேவரகொண்டாவையும் இணைத்து பேசுவதை மகிழ்ச்சியாகவே எடுத்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |