உலக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் விளங்குகிறது. இந்த ட்விட்டரில் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய வசதியாக எடிட் செய்யும் வசதி இடம் பெற்றிருக்கிறது. இந்த வசதி முதலில் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் இவர்கள் செய்யும் ட்வீட் அனைத்தையும் இனி எடிட் செய்து கொள்ளலாம். இந்த ட்விட்டர் ப்ளூ என்பது வெளிநாடுகளில் 4.99$(407.12) மாதம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் இந்த புதிய வசதிகள் கொண்ட ஆப் இந்தியாவிற்கு விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதில் டிக் டாக் செயலி போலவே இனி முழு ஸ்கிரீன் வீடியோக்களையும் பார்ப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதில் instagram மற்றும் youtube வீடியோக்களையும் பார்க்க முடிகிறது. இதனை கூறிய ட்விட்டர் நிறுவனம் ஹலோ என பதிவிட்டு எடிட் பட்டன் வேலை செய்கின்றதா என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என பதிவிட்டு இருக்கிறது. மேலும் இதற்கு முன்னால் எடிட் செய்யப்பட்ட விவரங்களை அறிய எடிட் ஹிஸ்டரி வசதியும் இடம்பெற்று இருக்கிறது. இந்த twitter ப்ளூ மூலம் வீடியோக்களை சரி பார்த்துக் கொள்ளவும் விளம்பரங்கள் இல்லாமல் புதிய ஆப் ஐகான் போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகளும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.