Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம்…. வரவு-செலவு கணக்குகளை கேட்டதால் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிராம சபை கூட்டத்தில் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்குமாறு ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் வீரமணி என்பவர் ஊராட்சியின் கேட்டுள்ளார். அதற்கு 2-வது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் நீங்கள் ஏன் கணக்கு கேட்கிறீர்கள்? தேவை என்றால் ஊராட்சி மன்றத் துணை தலைவி கேட்கட்டும் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இரண்டு பேரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து காயமடைந்த இரண்டு பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பதட்டமான சூழ்நிலை காரணமாக கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |