கூகுளின் pixel 7 மற்றும் pixel 7 pro ஸ்மார்ட்போன்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகுள்ளது. அதேபோல் pixel போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த தகவலை கூகுள் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஆனால் இதன் சரியான இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்தியாவில் அக்டோபர் 6 அன்று துவங்கும் என தெரியவந்துள்ளது. இதே தகவலை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து இருக்கிறது. pixel 7 series மாடல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் october 6 அன்று 9.30 மணிக்கு flipkart தளத்தில் முன்பதிவு செய்யலாம்.
இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. pixel 7 மாடலில் 6.3 inch FHD+OLED 90Hz refresh rate கொண்ட display, pixel 7 pro மாடலில் 6.7 inch QHD+ OLED 120 Hz refresh rate displayவழங்கப்படுகிறது. இரு போன்களிலும் display touching sensor, tensor G2 processor வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க pixel 7 pro மாடலில் 50MP primary camera, 12MP ultra wide lense, 48MP telephoto வழங்கப்படுகிறது. pixel 7 போனில் முந்தைய மாடலில் வழங்கப்பட்ட primary camera மற்றும் ultra wide lense கொண்டிருக்கிறது. pixel 7 series மாடலில் அதிகபட்சம் 12 GB RAM, 256 GB memory வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் 4700 mah மற்றும் 5000 mah battery வசதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 33 watt fast charging மற்றும் wireless charging வசதியும் செய்யப்பட்டுள்ளது.