Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ராட்சத எந்திரம் மீது மோதிய விரைவு பேருந்து….. டிரைவர் பலி; 8 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

ராட்சத எந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து அரசு விரைவு பேருந்து பயணிகளுடன் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சகாதேவன்(57) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாலம் அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத எந்திரம் மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சகாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து படுகாயமடைந்த சகாதேவனின் மனைவி வேம்பு(42), மகன் சுவாமிநாதன்(17) பயணிகளான சாந்தி(52), லாவண்யா(18) உள்பட 8 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகாதேவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |