கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழதரம் பகுதியில் அன்புமணி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரிக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்வி(58) என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அன்புமணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் கடந்த ஜூலை மாதம் முதல் அன்புமணி மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் விவசாய நிலத்திற்கு சென்று விஷம் குடித்த அன்புமணி மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வி உடனடியாக விளைநிலத்திற்கு சென்று தனது கணவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.