Categories
உலக செய்திகள்

சோமாலிய இராணுவத்தினரின் அதிரடி… சுட்டுக்கொல்லப்பட்ட அல்ஷபாப் இயக்கத் தலைவர்…!!!

சோமாலியா நாட்டில் இயங்கும் முக்கிய தீவிரவாத இயக்கமான அல்ஷபாப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோமாலிய நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அல்ஷபாப் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீவிரவாத அமைப்பினர் சர்வதேச நாடுகள் அங்கீகரித்த சோமாலிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயன்று வருகிறார்கள். இதற்காக ராணுவம் மற்றும் மக்களை நோக்கி அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அல்ஷபாப் இயக்கத்தினுடைய முக்கிய தலைவராக இருக்கும் அப்துல்லா நடீரின் தலையை கொண்டு வந்தால் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று சோமாலியா மற்றும் அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், சோமாலிய நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள், ஜூபா மாகாணத்தில் உள்ள ஹரம்கா என்னும் கிராமத்தில், தங்கள் நட்பு நாடுகளின் படையினரோடு சேர்ந்து நேற்று நடத்திய அதிரடி சோதனையில் மறைந்திருந்த அல்ஷபாப் இயக்கத்தின் முக்கிய தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Categories

Tech |