வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வினோத் குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சரவணன் மற்றும் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை காப்பாற்ற முயன்று இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.