Categories
தேசிய செய்திகள்

போலி மருந்துன்னு எப்படி கண்டுபிடிக்க?…. வரப்போகும் புது வசதி…. வெளியான தகவல்….!!!!

தாங்கள் கடையில் வாங்கக்கூடிய மருந்துகள் போலியானதா (அல்லது) தரமானதா என்பதை கண்டுபிடிக்க புதுவசதி விரைவில் வருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும்  முக்கியத்துவம்வாய்ந்த மருந்துகளின் தரம், பயன்பாட்டை கண்காணிக்கும் அடிப்படையிலும் போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கம் வகையிலும் டிராக் மற்றும் டிரேஸ் எனும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார்கோடு (அல்லது) க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட உள்ளது.

அதன்படி மருந்து-மாத்திரையின் முதல் டேபிளில் இந்த பிரிண்ட் இருக்கும். முதல் கட்டமாக நாடு முழுதும் அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகள், இதயநோய், வலி நிவாரணி மாத்திரை, தொற்றுக்கு எதிரான நோய்கள் ஆகியவை ஒரு மாத்திரை அட்டையின் விலை ரூ.100-க்கு மேல் இருக்கும் மருந்துகளுக்கும் இந்த வசதி அறிமுகமாகிறது. இத்திட்டம் 10 வருடங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டாலும், போதிய தொழில்நுட்பத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாததாலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதற்குத் தயாராகாததாலும் இது இன்னமும் திட்டமிடுதலிலேயே இருக்கிறது. இருப்பினும் இப்போது இது முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.

எனினும் ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் இந்த தொழில்நுட்பம் கொண்டுவரப்படுவதற்கு அடுத்த வருடம் ஏப்ரல் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடங்களில் போலிமருந்துகள் பெருமளவில் சந்தைகளில் கண்டெடுக்கப்பட்டது. சமீபத்தில் தைராய்டு பிரச்னைக்கும் க்ளென் மார்க் நிறுவனத்தின் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளும் போலியாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனையானது பல மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. சில நிறுவனங்களுக்கு என தனித் தனியே பார் கோடுகள் வழங்கப்பட்டு, அதை அந்தந்த நிறுவனங்கள் தங்களது மருந்துகளில் அச்சிட்டால் போலிகளை எளிதாக அடையாளம் காண வழிவகை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் இந்த நடவடிக்கை வாயிலாக மருந்து தயாரிப்பு செலவில் 3-4 % அதிகரிக்கும் எனவும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

Categories

Tech |