இளவரசர் ஹரி மேகன் தம்பதியினருக்கு திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் இவர்கள் இருவரும் ஓராண்டு காலம் தென்னாபிரிக்காவில் வசிக்க அரண்மனை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் போனது இந்த சூழலில் 2018 ஆம் வருடம் ஹரி மேகன் தம்பதி உத்தியோகபூர்வமான பயணம் செல்ல முடிவானது. இதனை அடுத்து தம்பதி இருவரும் பிஜியில் இரண்டு நாட்கள் தங்கவும் நாட்டின் ஜனாதிபதி சிறப்பு விருதை ஒன்றை ஏற்பாடும் செய்திருந்தார். இந்த நிலையில் குறித்த விருந்தில் முதன்முறையாக மேகன் கண்ணை பறிக்கும் வைரத்திலான காதணி அணிந்து காணப்பட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து வைர காதணிகள் கைமாறாக பெற்றது என கென்சிங்டன் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அதன் பின் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அந்த காதணிகள் சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் திருமண பரிசாக ஹரிமேகன் தம்பதியினருக்கு அளித்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த சூழலில் 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வரவழைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்டோபர் 20ஆம் தேதி பிஜியில் ஹரி மகன் தம்பதியினருக்கு இரவு விருந்து முன்னெடுக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் ஜமால் மரணத்திற்கு சவுதி அரேபியா தங்கள் அதிகாரிகளை காரணம் என ஒப்புக் கொண்டுள்ளது.
இதனை அடுத்து பிஜியில் மேகன் மெர்கல் அணிந்த அந்த காதணி தொடர்பில் விவாதம் எழுந்துள்ளது. மேலும் சவூதி இளவரசரின் ரத்தக்கறை படிந்த பரிசை மேகன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிஜிஎல் இருந்து திரும்பியபின் மூன்று வாரங்களில் அந்த நகையை மேகன் மெர்கல் அணிந்து இருக்கின்றார் பக்கிங்ஹாம் அரண்மனையில் நவம்பர் 14ஆம் தேதி முன்னெடுக்கப்பட்ட மன்னர் சார்லஸ் இன் 70 வது பிறந்த நாளிலும் மேகன் குறித்த காதணியை அனிந்துள்ளார். இதற்கிடையே இரண்டாவது முறையும் மேகன் குறித்த காதணியை அணிந்து கொள்ள அரண்மனை அதிகாரிகள் இளவரசர் ஹரியிடம் இது தொடர்பில் விவாதம் மேற்கொண்டுள்ளனர். ஹரி அவர்களின் குற்றச்சாட்டுகளை வியப்புடன் பார்த்தது மட்டுமில்லாமல் அது பற்றி கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் மேகனிடம் விவாதிக்கவும் அரண்மனை அதிகாரிகள் அஞ்சியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.