Categories
பல்சுவை

உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?… இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா..? இனி கலவையை விடுங்க. கரப்பான் பூச்சியை  விரட்டி அடிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். பேக்கிங் சோடாவின் உதவியுடன் கரப்பான்பூச்சிகளை அகற்றுவது எளிதாகும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபடுவதற்கு குளியல் அறையின் ஜாலியிலும், சமையல் அறை சிங்க்கைச் சுற்றியும் பேக்கிங்சோடாவை தூவ வேண்டும். அந்த பேக்கிங் சோடாவின் வாசனையானது கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது.

அதன்பின்  7 -8 மணிநேரத்திற்கு பிறகு ஒரு கப் வெது வெதுப்பான நீரை எடுத்து அவற்றில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை போட்டு கரைத்து, அதை வாய்க்காலில் போட்டால் கரப்பான் பூச்சிகள் அனைத்தும் இறந்து விடும். மேலும் அதை ஒழித்துக்கட்ட வாய்க்காலில் கொதிக்கும் நீரினை ஊற்றவேண்டும். இது வாய்க்காலில் உள்ளே தேங்கி இருக்கும் அழுக்குகளை அகற்றும். அவ்வப்போது வெந்நீரை வாய்க்காலில் ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

வீட்டிலுள்ள கரப்பான்பூச்சிகளை வெளியேற்றுவதற்கு, சமஅளவு வினிகரையும், தண்ணீரையும் கலக்கவேண்டும். இதையடுத்து இந்த கரைசலை வாய்க்காலில் ஊற்ற வேண்டும். வினிகரின் வாசனையில் இருந்து எல்லா கரப்பான் பூச்சிகளும் ஓடி விடும். போரிக் அமிலத்தினுடைய  வெளிப்பாடால் கரப்பான் பூச்சியின் கால்கள் மற்றும் இறக்கைகள் ஒட்டிக்கொள்கிறது. இதனிடையில் கரப்பான்பூச்சி போரிக் அமிலத்தைக் குடித்தால் இறந்து விடும். இவை அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனையுடன் செய்வது முக்கியமாகும்.

Categories

Tech |