Categories
மாநில செய்திகள்

UPSC தேர்வர்களுக்கு…. இலவசப் பயிற்சி…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையங்கள் கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சியை அளிக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டம் உள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பயிற்சி மையம் 225 முழுநேர தேர்வர்களையும், 100 பகுதி நேர தேர்வுவர்களையும் முதல் நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதனை போல அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழு நேர தேர்வுகளை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதி வழங்குகிறது.

இதனையடுத்து 2023 ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணைய குழு நடத்தும் குட்டிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மைய civilservicecoaching.com என்ற இணையதளம் மூலம் வருகின்ற 7 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி மையத்தில் ஏற்கனவே முதல் நிலைத் தேர்வுக்கு முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது. மேலும் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்கள் மத்திய தேர்வாணைக்கு குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதி உடைய நபர்கள் வருகின்ற 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கிடையில் முதல் நிலை தேர்வு பயிற்சிக்கான நுழைத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்படும் மாணவர், மாணவியர்கள் தங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இன வாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர். மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |