அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எதிரெதிர் துருவங்களாக மாறிய தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் முதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் இபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அங்கு தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பதால் ஓபிஎஸ் கை தற்போது ஓங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் பொன்னையன், ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசியது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய பல்வேறு விஷயங்களை பொன்னையன் கூறி இருந்தார். இதுபோன்ற ஒரு புதிய ஆடியோ தங்களிடம் இருப்பதாக தற்போது ஓபிஎஸ் தரப்பினர் கூறியுள்ளனர். மூன்று நிமிடம் கொண்ட அந்த ஆடியோவில் இபிஎஸ் முதல்வராக இருக்கும்போது தொண்டர்களுக்கு என்ன துரோகம் செய்தார் என்பது பதிவாகியுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஆடியோ விவகாரத்தால் தற்போது இபிஎஸ் பெரும் கலக்கத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.