இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி சேவைகள் தொடங்கிய வேகத்தில், 6ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சர்வதேச அளவில் 6ஜி தொழில்நுட்ப சேவையில் இந்தியா முன்னணி வகிக்கும்.
சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் அமைப்பில் 5ஜி மற்றும் 6ஜி குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்த குழுவில் இந்திய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த தகவலால் இந்தியாவில் விரைவில் 6ஜி சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கு தாமதம் செய்தாலும் 5ஜி சேவையானது அதிவேகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 5ஜி சேவையை விட 6 ஜி சேவை பல மடங்கு அதிவேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.