தென்னிந்தியாவின் பலமொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் சத்தியராஜ் தரமணி படத்தின் ஹீரோ வசந்த் ரவியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை சவாரி, வெள்ளை ராஜா போன்ற படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கி வருகின்றார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு வெப்பன் எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்து வருகின்றார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மிரட்டலாக இருக்கும் இந்த போஸ்டர் சத்தியராஜ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.