காலை எழுந்ததும் டீ குடிப்பதை அனைவரும் கலக்கமாக வைத்திருப்பர். தினமும் ஒரே வகையான டீ குடிப்பது என்ன உள்ளது ? ஒரு மாறுதலுக்கு டீயிலும் மாறுதல் கொண்டு வரலாமே..
கரம் மசாலா டீ
தேவையான பொருட்கள்
பால் 1 கப்
சர்க்கரை தேவைக்கேற்ப
தேயிலை 1 தேக்கரண்டி
தண்ணீர் 1 கப்
கரம் மசாலா பொடி 1/4 தேக்கரண்டி
செய்முறை
பாலை முதலில் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.
பால் கொதித்து வருகையில் சர்க்கரை, தேயிலையை போட்டு மேலும் கொதிக்கவிடவும்.
பின்பு அதனை வடிகட்டி கரம் மசாலா பொடியை போட்டு கலக்கி குடிக்கவும்.