நடிகை சமந்தாவுக்கு அரிய வகை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்க சென்றுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார். க்யூட் தமிழ் பொன்னான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் தெலுங்கு ரீமேக் காண ஏன் மாய சேசாவே படத்தில் நடித்திருந்தார். முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
சமந்தா முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்களின் வாழ்க்கை யாரின் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டு விட்டு பிரிந்துவிட்டனர். இவர்கள் இருவரின் பிரிவுக்கு காரணம் என்ன என தெரியாததால் சமந்தா குறித்து பல விதமான வதந்திகள் பரவியுள்ளன. சமந்தா விவாகரத்து முடிவால் மன வேதனையில் இருந்தார் மீண்டும் பழைய உத்வேகத்துடன் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு தனது மார்க்கெட்டை எகிற வைத்துள்ளார்.
இந்த குத்தாட்ட பாடலுக்கு பிறகு சமந்தாவின் சம்பளம் இரு மடங்காக கூடியது. இதனை அடுத்து நடிகை சமந்தா சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், அவர் polymorphous light eruption என்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பல வதந்திகள் பரவியுள்ளன. இது குறித்து விளக்கம் அளித்த சமந்தாவின் மேனேஜர் மகேந்திரா கூறியதாவது, “சமந்தா நலமுடன் இருக்கின்றார். அவருக்கு எந்த விதமான உடல்நல பிரச்சனையும் இல்லை தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சமந்தா எதற்காக அமெரிக்கா சென்றார் என்ற காரணம் தெரியவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு நல்ல படியாக சிகிச்சை முடிந்து விட்டதாகவும், இந்தியா திரும்பிய பிறகு குஷி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் கூறப்படுகின்றது. இப்படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 23-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வெளியாகயுள்ளது. மேலும் யசோதா, சகுந்தலம், ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு வெப் சீரிஸ் ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் இன் பேரிடப்படாத படங்களை கைவசம் வைத்திருக்கின்றார். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.