Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது, ஆதி புருஷ் கார்ட்டூன் படமா…!” மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ஆதி புருஷ் திரைப்படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றார்கள்.

நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். இந்தப்படம் அடுத்த வருடம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும். இந்தநிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் வந்த காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனவும் கார்ட்டூன் சேனலில் வருவது போல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றார்கள். இப்பொழுது ஆதி புருஷ் திரைப்படம் பற்றிய மீம்ஸ் அதிகம் வர ஆரம்பித்துள்ளது.

https://twitter.com/Cinemakaramcofe/status/1576593151929696257?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1576593151929696257%7Ctwgr%5E967155b60fa8ce0dcbb060f7bb710a32bb7c0160%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fadipurush-teaser-trolled-for-bad-vfx-1664724367

Categories

Tech |