சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்.
சென்னை மாவட்டத்திலுள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்க சாவடி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் சிறு பொட்டலத்தை அங்கிருந்த நபர்களிடம் கொடுப்பதை போலீசார் பார்த்தார்கள். இதையடுத்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஆன்யனி மோனிகா என்பதும் அவர் சென்ற 9 மாதங்களாக சென்னையில் உள்ள வேளச்சேரி பாரதி நகரில் தாங்கியுள்ளார் என்பதும் தெரியவன்ஹது. மேலும் தனது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக நைஜீரியாவில் இருந்து வந்த அவர், வந்த இடத்தில் வேலை எதுவும் கிடைக்காததால் பணம் எதுவும் இல்லாமல் தவித்து வந்தார்.
அப்போது ஒருவர் கொக்கின் போதை பொருளை சென்னையில் விற்பனை செய்து கொடுத்தால் பணம் தருவதாக கூறியதால் சென்னையில் தங்கி போதை பொருளை விற்பனை செய்து வந்திருக்கின்றார். ஒரு கிராம் 2000 க்கு வாங்கி 5,000-க்கு விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 72 சிறு கொக்கைன் பாக்கெட் மற்றும் விற்பனை செய்ததில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பணம், ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள். இதன் மொத்த மதிப்பு 5 லட்சத்து 75 ஆயிரம். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.