2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் விஜயதசமி என்ற எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைஅறிவிப்பை வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தனியார் பள்ளிகள் விஜயதசமி என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிடுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் விஜயதசமி என்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுவது வழக்கம்.