தமிழகத்தில் முதல் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டி நடத்துவதற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 10ஆம் தேதி முதல் நவம்பர் மூன்றாம் தேதிக்குள் நடத்தி முடித்து போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் விவரங்களை நவம்பர் 7ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாநில அளவிலான போட்டிகள் நவம்பர் 15 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும்.போட்டிகளை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பதினைந்தாயிரம் ரூபாய் நிதி விடுவிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.