திரைத்துறையில் 25 நபர்களிடம் ஏமாந்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து மீ டூ புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பியவர். தனக்கு பட வாய்ப்புகள் கொடுப்பதாக பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை ஊடகங்களிலும் புகார் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் பேச்சு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் தொடர்ந்து இப்படி பேசி வருவது விளம்பரத்துக்காக செய்வதாகவும் பலர் இவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து வருகின்றனர்.
இணையத்தில் பிரபலமாக இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே youtube போன்ற சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இளம் நடிகைகளுக்கு நான் சொல்வது ஒன்றுதான். கதைக்கு தேவை என்றால் மட்டும் கவர்ச்சி காட்டுங்கள். நான் அரை நிர்வாணமாக போராட்டம் செய்ததால் என் குடும்பத்தினர் கூட என்னிடம் பேசுவதில்லை. அவமானமாக இருக்கிறது என கூறினார்.