கடலை மாவு பர்ஃபி
தேவையான பொருட்கள்
கடலை மாவு 1/2 கிலோ
தண்ணீர் 1/2 லிட்டர்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
புளி கரைசல் 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கொத்தமல்லி இலை சிறிதளவு
சர்க்கரை 2 டீஸ்பூன்
முந்திரி 10
வத்தல் பொடி 2 டீஸ்பூன்
என்னை 1/2 லிட்டர்
உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- கடலை மாவுடன் நறுக்கிய முந்திரிப் பருப்பை சேர்த்து மஞ்சள் பொடி வத்தல் பொடி கொத்தமல்லி இலை தண்ணீர் சர்க்கரை பச்சைமிளகாய் உப்பு புளிக்கரைசல் அனைத்தும் சேர்த்துகட்டி பிடிக்காமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் சிறிது எண்ணெயை கடாயில் ஊற்றி எண்ணெய் சூடானதும் கலக்கி வைத்துள்ள கடலை மாவை அதனுடன் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- மாவு கலவை கட்டி பிடித்ததும் இறக்கிவிடவும்.
- பின்னர் குழிதட்டில் எண்ணெய் தடவி இறக்கிய கடலைமாவு கலவையை சமமாகப் உத்தவும்.
- பின்னர் மூடி வைத்து சிறிது நேரம் கழித்து வெந்தவுடன் ஆறவைத்து சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
- இறுதியாக பொரிக்க தேவையான அளவு எண்ணெயை கடாயில் ஊற்றி எண்ணெய் சூடானதும் சதுரவடிவில் வெட்டி வைத்துள்ள பர்ஃபியை போட்டு பொன்னிறமாகும் வரை காத்திருந்து பொரித்து எடுக்கவும்.
- இப்பொது சுவைமிக்க கடலைமாவு பர்ஃபி தயார்