Categories
அரசியல்

“ஞானத்தை அருளும் சரஸ்வதி பூஜை” ஸ்லோகம், மந்திரங்கள், பூஜை செய்யும் முறை…. இத ஃபாலோ பண்ணுங்க…!!!!

நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சரஸ்வதி பூஜையானது நாடு பொழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜையானது ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை திருநாளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய அலுவலகம் மற்றும் கடைகளில் தாங்கள் அன்றாடம் வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை அம்பாளுக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். இதேபோன்று படிக்கும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை தேவிக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். நாம் சரஸ்வதி தேவியை வணங்குவதற்கு முன்பாக நாம் இருக்கும் இடம் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தூய்மை படுத்த வேண்டும். அதன் பிறகு சந்தனம் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும்.

அதன்பின் பூஜை செய்வதற்கு முன்பாக சரஸ்வதி தேவியின் படத்திற்கும், பூஜை செய்வதற்காக வைத்திருக்கும் பொருட்களுக்கும் சந்தனம், குங்குமம் இட வேண்டும். இதனையடுத்து அன்னையின் திருவுருவ படத்தை பூக்களால் அலங்கரித்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் புத்தகங்களை தேவிக்கு முன்பாக வைக்க வேண்டும். இதைத்தொடர்ந்து அன்னையின் முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் எலுமிச்சை சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் சுண்டல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேதியமாக படைக்கலாம். அதன்பின் அவல்பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை வைத்து, அம்பாளுக்கு பிரியமான வெண்தாமரை, ரோஜா, செம்பருத்தி போன்ற மலர்களால் மாலை தொடுத்து அன்னைக்கு அணியலாம்.

பூஜையில் கலசம் வைத்து வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். பூஜை செய்யும் போது வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் அம்பாளின் பாடலை பாடி கலைவாணியை வணங்கலாம். நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் விரதம் இருந்து வழிபட்டாலே அம்பாளின் பூரண அருள் கிடைத்துவிடும். இந்த சரஸ்வதி பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பாக நாம் முதலில் கணபதி ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். அதற்கு மஞ்சளால் செய்யப்பட்ட ஒரு பிள்ளையாரை நாம் கைகளால் பிடித்து பூஜையில் வைக்கலாம். அதன்பின்,

  • சுக்லாம் பரதம் விஷ்ணு
  •  சர்ச் இவர்னம் சதுர்புஜம்
  • பிரசந்த் வதனம் தீயாயேத்
  • சர்வ விக்நோப சாந்தையே

என்ற மந்திரத்தை சொல்லி விநாயகப் பெருமானை வழிபடலாம்.

மேலும் சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு போது “துர்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம” என்று சொல்லி ஆரம்பிக்கலாம். இதேபோன்று வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் சரஸ்வதி ஸ்லோகத்தை சொல்லலாம். இந்த சரஸ்வதி சுலோகத்தை தற்போது பார்க்கலாம்.

  • ஸ்ரீ வித்யா ரூபினி சரஸ்வதி சகலகலாவல்லி
  • சாரபிம் பாரதி சாரதா தேவி சாஸ்திர வல்லி
  • வாணி கமல வாணி வாக் தேவி வரநாயகி
  • வீணா புஸ்தக தாரணி புஸ்தக ஹஸ்தே
  • ஸ்ரீ வித்யா லட்சுமி நமாஸ் துதே

இந்த மந்திரத்தை தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் 5 முறை சொன்னால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். அதோடு சரஸ்வதி தேவியின் 108 போற்றிகளையும் சொல்லி தேவியை வழிபடலாம்.

Categories

Tech |