Categories
சினிமா தமிழ் சினிமா

கொழுகொழுனு இருந்த நான்…. இப்படித்தான் எடை குறைத்தேன்…. சீக்ரெட் சொன்ன குஷ்பூ….!!!!

பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக அமைந்தன. கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல திறமை வாய்ந்த நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமா தயாரிப்பாளர், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பன்முகங்களை காட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பார்க்கவே கொழுகொழுவென்று இருந்த குஷ்பூ தன்னுடைய அடையாளத்தை முழுவதுமாக மாற்றி உள்ளார். இதற்கு காரணம் கொரோனா தான் என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பூ. கொரோனா காலத்தில் வீட்டில் அதிகமான பொழுதை கழித்த தான் வீட்டில் அனைத்து வேலைகளையும் தான் மட்டுமே செய்ததாகவும் யோகா, மெடிடேஷன் என்று நேரத்தை சிறப்பாக அமைத்துக் கொண்டதாகவும் அதனால்தான் ஒல்லியாக மாற காரணம் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது இயக்குனர் விஜய் ஸ்ரீ படம் ஒன்றில் நடிப்பதற்காக குஷ்புவின் உடல் எடையை குறைக்க கேட்டுக் கொண்டதாகவும் அதனால குறுகிய காலத்தில் அவர் தன்னுடைய உடலை குறைத்து ஒல்லியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |