Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! #PS1 வசூலில் வரலாற்று சாதனை…. எவ்வளவு தெரியுமா…? இது வேற லெவல்…!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக சினிமா வரலாற்றில் முதல் முறையாக படம் வெளியான 4 நாட்களிலேயே ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது #PS1.

இதில், தமிழகத்தில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வசூலில் சக்கப்போடு போடுகிறது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வசூலில் கெத்து காட்டுகிறது. இந்த வார இறுதியில் ரூ. 400 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |