Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் 380 பேருக்கு….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது வரை தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3-4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும்.

தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதால் தமிழக முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளதால் கடந்த 11 நாட்களாக நாள்தோறும் ஆயிரம் முதல் 1500 முகாம்கள் தமிழகம் முழுவதுமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |