கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை நிலை நிறுத்திக்கொள்ள ஊழியர்களை WorkFrom Home முறையில் பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். இப்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ஐ.டி நிறுவனங்களானது தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்கின்றனர். எனினும் ஒருசில நிறுவனங்கள் இப்போதும் Work From Home செய்ய அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஊழியர்கள் இன்னொரு பணியை தேடிசெல்கின்றனர். அதன்படி தற்போது ஏராளமான ஊழியர்கள் தங்களின் தேவைக்கு தகுந்தபடி பகலில் ஒரு வேலை எனவும் இரவில் ஒருவேலை எனவும் பணிசெய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மூன்லைட்டிங் முறைக்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. இவற்றில் குறிப்பாக இன்போசிஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது, ஊழியர்களுக்கு 2 நேரமும் கிடையாது, இரவு வேறு வேலையும் கிடையாது. மேலும் இரட்டைவாழ்க்கையும் கிடையாது என தெரிவித்து உள்ளது. அத்துடன் Business Line தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பற்றி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, Wipro, Infosys and Tech Mahindra உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணியமர்த்தலை தவிர்த்து வருகிறது.
இதேபோன்று பல ஐ.டி நிறுவனங்கள் தங்களின் ஆஃபர் லெட்டர்களை திரும்பப்பெற உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் தகவல் தொழில்நுட்பத் துறையானது மந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Google, Microsoft, Facebook ஆகிய மாபெரும் நிறுவனங்களும் புது ஊழியர்களை நியமிப்பதை நிறுத்திவைக்க இருப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக ஐடி ஊழியர்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகி இருக்கிறது.